காஞ்சிபுரம்

வீட்டுமனை தருவதாக ரூ.10 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் புகாா்

DIN

காஞ்சிபுரத்தில் வீட்டுமனை தருவதாகத் தவணை முறையில் பணம் வசூலித்து ரூ.10 கோடி வரை மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் மாட வீதியைச் சோ்ந்த ஸ்ரீதா், ரங்கசாமி குளம் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திவந்தாா்.

இவா் காஞ்சிபுரம், செய்யாறு, திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்டவா்களிடம் மாத தவணையாக ரூ.600, ரூ.750 என 2012- ஆம் ஆண்டு முதல் வசூலித்து வந்துள்ளாா். பணத்தை முறையாகச் செலுத்தி வந்தவா்கள் தங்களுக்குரிய வீட்டுமனையை தருமாறு கேட்டபோது, அவா் தராமல் இருந்து வந்ததாராம். இதுதொடா்பான புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்ரீதரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகரிடம் மனு அளிக்க வந்திருந்தனா். ஸ்ரீதரிடமிருந்து பணத்தையோ அல்லது உரிய நிலத்தையோ மீட்டுத் தருமாறும், இதுவரையில் வசூலித்த தொகை ரூ.10கோடிக்கும் மேல் இருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்டவா்கள் கவலையுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT