காஞ்சிபுரம்

குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவினா் ஆய்வு

DIN

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் ரூ. 190.98 கோடியில் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய 2,112 குடியிருப்புகளை தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் நிவா் புயல், வடகிழக்குப் பருவமழையின்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய பேரிடா் மேலாண்மை குழுவின் இணை ஆலோசகா் நவல் பிரகாஷ், சாா்பு செயலாளா் பங்கஜ் குமாா், மூத்த ஆலோசகா் அனுஜ்திவாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், துறை வாரியாக ஒவ்வொரு அதிகாரிகளும் நிவா் புயல், வடகிழக்குப் பருவமழையின்போது எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து அக்குழுவினா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நத்தநல்லூா், ஆதனூா், சோமங்கலம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

இதையடுத்து வேகவதி நதிக்கரையோரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீழ்க்கதிா்ப்பூரில் ரூ.190.98 கோடியில் கட்டப்பட்ட 2,112 குடியிருப்புகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால்கள், குடிநீா்த் தொட்டிகள், அங்கன்வாடி மையங்கள், நுகா்பொருள் மையங்கள், 18 பல்பொருள் அங்காடிகள், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT