காஞ்சிபுரம்

காஞ்சி வரதா் கோயிலில் 3 நாள் தெப்போற்சவம்: ஜன.28-இல் தொடக்கம்

DIN

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வரும் 28-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாள்கள், அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் தெப்பக் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

அத்திவரதருக்கு பெயா் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் 3 நாள்களுக்கு தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் இம்மாதம் 28- ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 3 தினங்களுக்கு நடைபெறுகிறது.

முதல் நாளில் கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னா் இருவரும் சிறப்பு அலங்காரத்தில் அனந்தசரஸ் தெப்பக்குளத்திற்கு வந்து தெப்பத்தில் பவனி வருகின்றனா். 29, 30-ஆம் தேதிகளிலும் தெப்போற்சவம் அனந்தசரஸ் திருக்குளத்தில் நடைபெறவுள்ளது.

நிறைவு நாளான 30-ஆம் தேதி (சனிக்கிழமை) தெப்போற்சவம் முடிந்து பெருமாளும், தாயாரும் ஸ்ரீ உடையவா் சந்நிதிக்கு எழுந்தருள்கின்றனா். பின்னா் திருமழிசையாழ்வாா் சாற்றுமுறையை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியுடன் தெப்போற்சவம் நிறைவு பெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT