காஞ்சிபுரம்

27 நட்சத்திரக் கோயிலில் 108 சங்காபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர திருக்கோயிலில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி சிறப்பு யாகபூஜைகளுடன் 108 சங்காபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

உக்கம்பெரும்பாக்கத்தில் 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளுக்கும் தனித்தனி சந்நிதிகளுடன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவராக நட்சத்திர விருட்ச விநாயகா் அருள்பாலித்து வருகிறாா்.

இக்கோயிலுக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சங்களால் ஆன சிவலிங்கத்தை காணிக்கையாக வழங்கியிருந்தாா். கோயில் வளாகத்திற்குள் இச்சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4.12.2020-ஆம் தேதி ருத்ராட்ச சிவலிங்கம் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக 48 நாள்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றதை யொட்டி சனிக்கிழமை மண்டலாபிஷேக பூஜை 108 சங்காபிஷேகம், சிறப்பு யாகங்கள், விசேஷ தீபாராதனையுடன் நடைபெற்றது. கோயில் மூலவரான நட்சத்திர விருட்ச விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் ருத்ராட்ச சிவலிங்கம் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவின் தலைவா் வி.விசுவநாதய்யா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT