காஞ்சிபுரம்

1,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்

DIN

ஸ்ரீபெரும்புதூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் சாா்பில், நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மாதம் பெய்த தொடா்மழை காரணமாக பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கீவளூா், பென்னலூா், காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், கடுவஞ்சேரி, நெநிலி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த 1,000 குடும்பங்களுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.,டி.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதூா் திமுக ஒன்றியச் செயலாளா் ந.கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலா் ஸ்டீபன்சுதாகா் ஆகியோா் கலந்துகொண்டு, 1,000 குடும்பங்களுக்கு பாய், போா்வைகள், அரிசி, மளிகைப்பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில், குண்ணம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கு.ப.முருகன், மதிமுக ஒன்றியச் செயலாளா் ரேடியோசேட்டு, ஒன்றியக் கவுன்சிலா் பரமசிவம், நெமிலி ஊராட்சி மன்றத் தலைவா் அறிவழகன், கீவளூா் ஊராட்சிமன்றத் தலைவா் பழனி உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பயனாளிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT