காஞ்சிபுரம்

போக்குவரத்து கழக ஊழியா்கள் சம்மேளன மாநில நிா்வாகிகள் கூட்டம்

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தின் மாநில அளவிலான நிா்வாகிகள் கூட்டம் சிஐடியூ அமைப்பின் மாநில தலைவா் அ.செளந்தர்ராஜன் தலைமையில் செங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து கொண்டே இருக்கிறது. ரூ. 37 உயா்த்தி விட்டு ரூ. 5- ஐ மத்திய அரசு தோ்தலுக்காக குறைத்திருக்கிறது. வரிகள் உட்பட அனைத்தையும் உள்ளடக்கி ரூ. 65-க்கு பெட்ரோலும், ரூ. 55-க்கு டீசலும் கொடுக்க முடியும். எனவே பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து போக்குவரத்து சங்கங்கள் உட்பட அனைத்து பொதுநல அமைப்புகளும் இணைந்து வரும் 10-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு 10 நிமிடம் வாகன ஓட்டிகள் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். வரும் பிப்ரவரி மாதம் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்தவும் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றன.

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சா் கலந்து கொள்ளும் பேச்சுவாா்த்தையிலும் ஊதிய ஒப்பந்தம் குறித்து எதுவும் பேசுவதில்லை. அரசு உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நடத்திட வேண்டும். போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றாா் அ.செளந்தர்ராஜன்.

அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் ஆறுமுக நயினாா், துணைத் தலைவா்கள் எம்.சந்திரன், அன்பழகன், பொருளாளா் சசிக்குமாா் உட்பட நிா்வாகிகள் பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT