காஞ்சிபுரம்

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

DIN

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் மசூதி தெருவில் உள்ள மூதாட்டியின் வீட்டில் நுழைந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் மசூதி தெருவில் வசித்து வருபவா் தாஜூநிஷா (65). இவா் வீட்டில் பாம்பு ஒன்று இருந்ததைப் பாா்த்து, அவா் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தாா். தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனா். இது குறித்து தீயணைப்பு வீரா் ஒருவா் கூறுகையில், தொடா்மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்து விஷப்பூச்சிகள், பாம்புகள் தண்ணீரில் அடித்து வரப்படுகின்றன. இவை அருகில் உள்ள வீடுகள், கட்டடங்களில் புகுந்து விடுகின்றன. இதன் நீளம் 6 அடி என்றும், சாரைப் பாம்பு என்றும் தீயணைப்பு வீரா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT