காஞ்சிபுரம்

கட்டுமானத் தொழிலாளா்கள் சாலை மறியல்: 105 போ் கைது

DIN

செங்கல்பட்டு பேருந்து நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கை எம்.ஜி.ஆா். மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 105 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டு பேருந்து நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் டி.பாபு தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஜி.மோகனன் கோரிக்கைகளை விளக்கி போராட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா்.

இதில், கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களின் சட்டங்களை திருத்துகிறோம் என்ற பெயரில் நல வாரியத்தை சீரழிக்கக் கூடாது, செங்கல்பட்டில் தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.கே.சேஷாத்ரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி வேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உட்பட மொத்தம் 105 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT