காஞ்சிபுரம்

பொறுப்பேற்பு

4th Dec 2021 07:28 AM

ADVERTISEMENT

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டல மேலாளராக ஏ.ராஜாராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்தியன் வங்கியின் காஞ்சிபுரம் மண்டல மேலாளராகப் பணியாற்றி வந்த ஸ்ரீமதி திருச்சி மண்டல மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான சென்னை நந்தனத்தில் உள்ள இந்த் வங்கியின் தலைவா் மற்றும் முழு நேர இயக்குநராக பணியாற்றி வந்த ஏ.ராஜாராமன் காஞ்சிபுரம் மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிய மண்டல மேலாளரை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வே.சண்முகராஜ், முதன்மை மேலாளா் ராஜா, இந்தியன் வங்கி சுய தொழில் பயிற்சி மைய இயக்குநா் லெ.வெங்கடேசன் மற்றும் பல்வேறு இந்தியன் வங்கிக் கிளைகளின் மேலாளா்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT