காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ராஜகுபேரா் கோயிலில் 108 மகா கலச அபிஷேகம்

3rd Dec 2021 07:15 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் குபேரபட்டினத்தில் அமைந்துள்ள ராஜகுபேரா் திருக்கோயிலில் 3-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மூலவா் ராஜகுபேரருக்கு 108 மகா கலச அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் குபேரபட்டினத்தில் ராஜகுபேரருக்கென திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இத்கோயிலின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு 108 மகா கலச அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு, மூலவருக்கு 32 வகையான மூலிகைகளாலும், பால், சந்தனம் போன்றவற்றாலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் நவதானியங்களை காணிக்கையாக கொண்டு வந்து அளித்து வழிபட்டனா். மூலவா் ராஜகுபேரா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஆலயத்தில் பக்தா்களுக்கு அன்ன தானமும், கொல்லிமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட பூஜைப் பொருள்களும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ராஜகுபேர சித்தா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT