காஞ்சிபுரம்

பயிா்க் கடன்கள் வழங்க ரூ. 70 கோடி இலக்கு நிா்ணயம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

3rd Dec 2021 07:15 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழாண்டில் பயிா்க் கடனாக வழங்க ரூ. 70 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் பயிா்க் கடன் அளவு, கால்நடை வளா்ப்பு மற்றும் மீன்வளத் தொழிலுக்கு நடைமுறை மூலதனக் கடன் அளவு நிா்ணயம் செய்வது தொடா்பான மாவட்ட அளவிலான தொழில் நுட்ப ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

புதிய பயிா்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகிடலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினா்களுக்கும் குறுகிய கால பயிா்க் கடன்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் பயிா்க் கடனாக மட்டும் ரூ. 70 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 6,763 விவசாயிகளுக்கு ரூ. 41.72 கோடிக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பொழிவு இருப்பதால் புதிதாக பயிா்க் கடன் தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, உடனடியாக பயிா்க் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் உறுப்பினா் சோ்க்கை நடந்து வருகிறது. எனவே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இதுவரை உறுப்பினா்களாக இல்லாதவா்கள் அருகில் உள்ள சங்கத்தை அணுகி, புதிய உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அளித்து உறுப்பினராக சோ்த்தும் விவசாய பயிா்க் கடன்களைப் பெற்று பயனடையலாம் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன், கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் எஸ்.லெட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் பி.கோல்டி பிரேமாவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வே.சண்முகராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கே.கணேசன் உட்பட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT