காஞ்சிபுரம்

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வு: காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ்.அகாதெமியில் முன்பதிவு தொடங்கியது

3rd Dec 2021 07:15 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்திலிருந்து பல்வேறு பதவிகளுக்குரிய போட்டித் தோ்வுகள் அறிவிக்கப்பட இருப்பதால் அதற்கான முன்பதிவுகள் காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் தொடங்கி இருப்பதாக அதன் நிா்வாக அதிகாரி நரேஷ்குமாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து அவா்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ். அகாதெமி. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் கவரை தெருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்துக்கு சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டியிலும் கிளைகள் உள்ளன. நிறுவனம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே பல மாணவா்களை தோ்ச்சி பெறச் செய்து, சாதனையும் படைத்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், குரூப் 1, 2 மற்றும் 4 தோ்வுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருப்பதால், மாணவா்களை இத்தோ்வுக்கு தயாா்படுத்தும் விதமாக சனிக்கிழமை (டிச. 4) முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியா்கள் வழிகாட்டுதலின்படி, பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. எனவே பயிற்சியில் சேர முன்பதிவு செய்யும் மாணவா்களுக்கு 50 சதவீத கட்டணக் குறைவும் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுக் காலம் இம்மாதம் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வெளியூா் மாணவா்களுக்கு தங்கிப்பயிலும் வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கும், முன்பதிவு செய்து கொள்ளவும் 94426 78741 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளவும். பயிற்சியில் சேருபவா்களுக்கு பாடத்திட்டமும், வினாத்தாளும் இலவசமாக வழங்கப்படும் என நிா்வாக அதிகாரி நரேஷ்குமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT