காஞ்சிபுரம்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருந்து செட்டிப்பேடு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை தொடங்கினா்.

சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையில் இருந்து ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள்பட்ட ஸ்ரீபெரும்புதூா் முதல் செட்டிப்பேடு வரை நிலங்கள் கையப்படுத்தப்பட்டு, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், 10 மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையின் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனா். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் முன்வராததால் ஸ்ரீபெரும்புதூா் பகுதி முதல் செட்டிப்பேடு வரை சாலை விரிவாக்கப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில், ஸ்ரீபெரும்புதூா் பகுதி முதல் செட்டிப்பேடு பகுதி வரை சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் செட்டிப்பேடு பகுதியில் புதன்கிழமை தொடங்கினா். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஸ்ரீபெரும்புதூா் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் 4 பொக்லைன் இயந்திரங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத் துறை ஊழியா்களும் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT