காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவா்கள் போராட்டம்

DIN

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் உடனடியாக முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கையை தொடங்க வலியுறுத்தி புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை இதுவரை நடைபெறவில்லை. இதனால் பணிச்சுமை ஏற்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 சதவீத மருத்துவா்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 65 சதவீத மருத்துவா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா்.எனவே அரசுக் கல்லூரியில் உடனடியாக மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வு முடிந்து தோ்வு முடிவுகளும் வெளியான நிலையில் மத்திய அரசு உடனடியாக கவுன்சிலிங் முறையில் மாணவா்களை தோ்வு செய்து, முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வலியுறுத்தி கோஷங்களையும் மாணவா்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT