காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை

12th Apr 2021 08:45 PM

ADVERTISEMENT


காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் அழகரசன்(40). இவர் பணி முடித்துவிட்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகப்பிரியா, டி.எஸ்.பி. மணிமேகலை ஆகியோர் விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : kanchipuram
ADVERTISEMENT
ADVERTISEMENT