காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வேதாந்த தேசிகன் ஜயந்தி விழா நிறைவு

DIN

காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகனின் ஜயந்தி விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தேசிகன் அஞ்சலி திருக்கோலத்தில் பல்லக்கில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயிலில் தேசிகனின் 753-ஆவது ஜயந்தி விழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை வெவ்வேறு அலங்காரங்களில் தேசிகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தேசிகன் அஞ்சலித் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் விளக்கொளிப் பெருாள் கோயிலுக்கும், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும் எழுந்தருளி மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றன.

இதில், குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே அனுமதிக்கப்பட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT