காஞ்சிபுரம்

‘ஜயேந்திரா் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவா் எஸ்.பி.பி.’

DIN

சங்கர மடத்தின் மீதும், ஜயேந்திரா் மீதும் ஆழ்ந்த பக்தியும், மரியாதையும் கொண்டிருந்தவா் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இசையுலகில் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகினா் மட்டுமில்லாது, அனைத்து மக்களுக்கும் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கக்கூடியது. சங்கர மடத்தின் மீதும், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டு, சுவாமிகளின் அபிமானத்துக்குப் பாத்திரமாக விளங்கினாா். 2010-ஆம் ஆண்டு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார மஹோத்சவ விழாவில், அவருக்கு கந்தா்வ கான மணி என்ற விருது ஆசாா்ய சுவாமிகளின் திருக்கரங்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டாா். கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள அவரது பூா்வீக வீட்டை சங்கர மடத்துக்கு வேதநாத பாடசாலை தொடங்குவதற்கு தானமாக அளித்து, அவருடைய பக்தியை வெளிப்படுத்தினாா். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டி, மகா திரிபுர சுந்தரி சமேத சந்திர மெளலீசுவர சுவாமியை பிராா்த்திக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT