காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் பா.பெஞ்சமின் தொடங்கி வைத்தார்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குடியிறுப்புகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் 42 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை மணிமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் தொடங்கிவைத்தார். 

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகஅளவில் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க நியாயவிலைக் கடைகளில் நீண்ட வரிசையில் மணிகணக்கில் காத்திருப்பதை குறைக்கவும், குக்கிராமங்களில் பகுதிநேர கடைகள் திறப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும், நகரும் நியாயவிலைக் கடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, பொதுமக்கள் வசிக்கும் குடியிறுப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் பொருட்டு, 3501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூ9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி மணிமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.பொன்னைய்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி,வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துக்கொண்டு அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை கொடியசைத்து தொடங்கிவைத்து பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 கடைகளும், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 12கடைகளும், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 11கடைகள் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்படும். இந்த நகரும் நியாயவிலைக் கடைகள் மாதம் ஒன்றுக்கு ஒருநாள் வீதம், குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசியப் பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

இந்த நகரும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாதவர்கள் நியாயவிலைக் கடைகளுக்கே நேரடியாக சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7814 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றார். இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவுவங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் லோகநாதன், படப்பை}மணிமங்கலம் தொடக் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் என்.டி.சுந்தர், ஸ்ரீபெரும்புதூர் நகரகூட்டுறவு வீட்டுவசதிசங்க தலைவர் செந்தில்ராஜன், அரசு சிறப்பு வழக்குரைஞர் அன்புச்செல்வன், மணிமங்கலம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வேணுகோபால், உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT