காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பழைமையான காய்கறிச் சந்தை மீண்டும் திறப்பு

DIN

காஞ்சிபும்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த காஞ்சிபுரத்தின் பழைமையான காய்கறிச் சந்தை திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தின் மிகப்பழமையான காய்கறிச் சந்தை காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூருக்கு மாற்றப்பட்டது. அந்தச் சந்தை சந்தை சேறும், சகதியுமாக இருந்ததால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது. இதனால் காஞ்சிபுரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள நசரத்பேட்டைக்கு மாற்றப்பட்டது. தொலைவு காரணமாக அப்பகுதிக்கு காய்கறி வாங்க யாரும் செல்லவில்லை. காய்கறி விற்பனையும் பாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பழைய காய்கறிச் சந்தையைத் திறக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று, ராஜாஜி காய்கறிச் சந்தையை பழைய இடத்திலேயே தொடங்க ஆட்சியா் அனுமதியளித்தாா்.

இந்நிலையில், சந்தையின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலா் வீ.சோமசுந்தரம் காய்கறிச் சந்தையைத் திறந்து வைத்து, விற்பனையைத் தொடக்கி வைத்தாா். இதையொட்டி, சந்தைப் பகுதியில் உள்ள கோயிலில் தண்டுமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, அதிமுக மாவட்ட இளைஞா் பாசறை துணைத் தலைவா் திலக்குமாா் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT