காஞ்சிபுரம்

கிணற்றில் தவறி விழுந்து உணவக உரிமையாளர் பலி

DIN

படப்பையில் கிணற்றில் தவறி விழுந்து உணவக உரிமையாளர் பலியானார்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குகன்(40), இவர் படப்பை பஜார் பகுதியில் உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் படப்பை அண்ணாநகர் முதல் தெருவில் வசித்து வரும் குகனின் அக்கா ஆதிலட்சுமி வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த குகன் வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றுக்கு அருகாமையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியானார்.

இதை கண்ட ஆதிலட்சுமியின் மகன் சதீஷ் (16) குகனை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால் நீச்சல் தெரியாததால் சதீஷ்க்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதுகிறித்து அப்பகுதி பொதுமக்கள் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு கிணற்றில் விழுந்த குகன் மற்றும் சதீஷின் உடலை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்து பலியான குனனின் சடலத்தையும், உயிருக்கு போராடிய சதீஷின் உடலில் கயிறு கட்டி துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர். 

இதையடுத்து கிணற்றில் விழுந்து பலியான குகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும், மூச்சுத்தினறல் ஏற்பட்ட சதீஷை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் மணிமங்கலம் காவல்துறையினர் அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT