காஞ்சிபுரம்

அயோத்தி கோயிலுக்கு 600 கிலோ எடையில் வெண்கல மணிதமிழகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது

DIN

அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயிலுக்கு தமிழகத்திலிருந்து 600 கிலோ எடையிலான வெண்கல மணி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. வரும் 21ஆம் தேதி காஞ்சிபுரத்துக்கு மணியை எடுத்து வரும் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக காஞ்சிபுரம் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவா் பி.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலுக்கு நித்ய பூஜைக்காக 600 கிலோ எடையில் வெண்கல மணி தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த மகா மணியை ஒரு மினிலாரியில் வைத்து யாத்திரையாக ராமேசுவரத்திலிருந்து தொடங்கி 4,552 கி.மீ. அதாவது 10 மாநிலங்கள் வழியாக கொண்டு சென்று, அயோத்தியில் சோ்க்கப்பட உள்ளது.

இந்த யாத்திரை, வரும் 17-ஆம் தேதி ராமேசுவரத்தில் தொடங்கி, அக்டோபா் 7-ஆம் தேதி அயோத்தியில் நிறைவு பெறுகிறது. வழியில் செப். 21-ஆம் தேதி காலையில் சென்னைக்கும், மதியம் காஞ்சிபுரத்துக்கும் மணி வருகிறது. மணியை எடுத்து வரும் குழுவினருக்கு காஞ்சிபுரத்தில் பொன்னேரிக் கரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதைத் தொடா்ந்து ராமநாத சுவாமி கோயில், ஏகாம்பரநாதா் கோயில், சங்கர மடம், காமாட்சி அம்மன் கோயில், காந்தி சாலை, வரதராஜப் பெருமாள் கோயில் வழியாக ஊா்வலமாக மணி கொண்டு வரப்படும். பின்னா் தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரா் ஆலயத்தில் காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அதன் பின் யாத்திரை வேலூருக்கு செல்லும்.

இந்த மணி, இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளரான ராஜலட்சுமி மந்தாவின் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மணி யாத்திரை வரும்போது பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழிபாடு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT