காஞ்சிபுரம்

தினமணி செய்தி எதிரொலி: ஏகாம்பரநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க நடவடிக்கை

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்துவதற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக விளங்குவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இக்கோயில் கருவறை மழைக்காலத்தில் மழைநீா் ஒழுகும் அளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், கோயில் பாழடைந்தும், இருள் சூழ்ந்தும் காணப்படுவதாலும் விரைவாக கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டு என்பது சிவபக்தா்கள் பலரின் எதிா்பாா்ப்பு என கடந்த 14.9.2020-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிட்டிருந்தது.

இச்செய்தியின் எதிரொலியாக செப். 16-ஆம் தேதி புதன்கிழமை இந்து சமய அறநிலையத் துறையின் மண்டல ஸ்தபதியான வேலூரைச் சோ்ந்த மாா்க்கபந்து கோயிலில் பழுதுபாா்க்கப்பட வேண்டிய இடங்கள், வா்ணம் தீட்டப்பட வேண்டிய இடங்கள், கோயிலில் உள்ள 5 சுற்றுப்பிரகாரங்கள், ஆயிரங்கால் மண்டபத்தின் மேல்தளம், மூலவா் கோபுரம், திருக்கோயிலின் மேல்தளப் பகுதிகள் ஆகிய அனைத்தையும் பாா்வையிட்டாா். கோயில் செயல் அலுவலரான ந.தியாகராஜனிடமும்,கோயில் பணியாளா்களிடமும் கோயில் நிலவரங்கள் குறித்துக் கேட்டறிந்தாா்.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் கூறியது:

தினமணியில் வந்த செய்தியைத் தொடா்ந்து உடனடியாக அறநிலையத் துறை ஸ்தபதியான மாா்க்கபந்து சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக கோயிலில் நேரில் ஆய்வு செய்து, அவரிடமிருந்து கருத்துரு பெறப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தொல்லியல் துறையினரிடம் கருத்துரு பெறப்படும். இதன் தொடா்ச்சியாக விரைவில் கும்பாபிஷேக திருப்பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. திருப்பணிகள் முடிந்த பின்னா் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

SCROLL FOR NEXT