காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார் மகேஸ்வரி ரவிக்குமார்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக மகேஸ்வரி ரவிக்குமார் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பா பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்து பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமான மரங்கள் மட்டும் ஏரிகளை பலப்படுத்துவதற்காக கரைகளை தூர்வாரி மழை அதிகம் பொழிவதற்கான முயற்சிகளில் ஈடுபட இருப்பதாகவும், பொதுமக்களின் குறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். 

புதிய ஆட்சியரை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி மற்றும் அதிகாரிகள் பலரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT