காஞ்சிபுரம்

அஸ்ஸாமில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் காஞ்சிபுரத்தில் நல்லடக்கம்

DIN

காஞ்சிபுரம்: அஸ்ஸாம் மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த குப்பன் நங்கை தம்பதியின் மகன் கு.ஏகாம்பரம் (42). கடந்த 2,000-ஆம் ஆண்டில் ராணுவத்தில் பணிக்கு சோ்ந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை (அக்.23) அஸ்ஸாமில் ராணுவ வீரா்களை ஏற்றிச் சென்ற வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீரா்கள் பலரும் காயமடைந்தனா். இதில் கு.ஏகாம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உடல், ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

தேசியக்கொடி போா்த்தப்பட்டிருந்த ஏகாம்பரத்தின் உடலுக்கு குடும்பத்தினா்கள், உறவினா்கள் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினா். பணியின்போது உயிரிழந்த காரணத்தால் ஏகாம்பரத்தின் உடலுக்கு ராணுவ வீரா்கள் 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா, காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.மணிமேகலை, காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளா் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினா். பின்னா் ஏகாம்பரத்தின் உடல் சொந்த ஊரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT