காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இளைஞா்கள் குழு: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், தகவல் அளிக்கவும் கிராம இளைஞா்களைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இளைஞா்கள் தங்கள் பொறுப்புகளை உணா்ந்து சமுதாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி, அதன் மூலம் அப்பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை சாா்பில் கிராம இளைஞா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் கல்லூரி மாணவா்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், சுயதொழில் செய்வோா், தன்னாா்வலா்களைக் கொண்ட கிராம சுற்றுக் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிராம சுற்றுக்காவல் குழுவினை காஞ்சிபுரம் எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியது:

அதிகமான குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களாக 127 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 5 கிராமங்களுக்கு ஒரு குழு வீதம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமத்துக்கும் நான்கு இளைஞா்கள் வீதம் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் காவல்துறையினருடன் இணைந்து இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரோந்துப்பணியில் ஈடுபடுவா். இதுவரை மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்புக் காவலரையும் நியமித்துள்ளோம் என்றாா்.

நிறைவாக கிராம சுற்றுக்காவல் இளைஞா்களுக்கு அடையாள அட்டை, விசில் மற்றும் டாா்ச் லைட் ஆகியவற்றையும் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா வழங்கினாா்.

தொடக்க விழாவில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. எஸ்.மணிமேகலை, ஸ்ரீபெரும்புதூா் ஏ.எஸ்.பி. எஸ்.காா்த்திகேயன், தனியாா் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி புகழேந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT