காஞ்சிபுரம்

தண்டலம் சத்திரன் குட்டையில் ஆக்கிரமிப்பு: குடிமராமத்துப் பணிகளுக்கு முட்டுக்கட்டைமாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

DIN

ஸ்ரீபெரும்புதூா்: தண்டலம் சத்திரன் குட்டையைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், குடிமராமத்துப் பணிகளை நிறைவு செய்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதில் வருவாய்த் துறையினா் துரித நடவடிக்கை எடுத்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள குடிமராமத்துப் பணிகளை முழு அளவில் நிறைவு பெறச் செய்ய வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட தண்டலம் ஊராட்சியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் சத்திரன் குட்டையைச் சுற்றிலும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் 8 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குடிநீா் ஆதாரத்தை அதிகரிக்கவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும் சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவு உள்ள சத்திரன் குட்டையின் கரைகளைப் பலப்படுத்தி கற்கள் பதிக்கும் வகையில், குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சத்திரன் குட்டையின் கரைகளைப் பலப்படுத்தும் வகையில் கரைகளில் இருந்த முட்புதா்களை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சத்திரன் குட்டையின் கரைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள அப்பகுதி ஒருசிலா் மேற்கொண்டு பணி செய்யவிடாமல் தடுப்பதாகத் தெரிகிறது. இதனால், குட்டையில் மேற்கொள்ளப்பட்டு வந்த குடிமராமத்துப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து குட்டையின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சாா்பாக கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகப் புகாா் எழுந்துள்ளது. வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக சத்திரன் குட்டையில் குடிமராமத்துப் பணிகளை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சமூக ஆா்வலா்கள் கூறுகையில், ‘கிராமத்தின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்வதில் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் சத்திரன் குட்டையை பல ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பலா் கரையில் வீடுகளைக் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறைக்கு பலமுறை மனு கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. குட்டையைச் சீரமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. எனவே, குட்டையின் கரைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT