காஞ்சிபுரம்

தீயணைப்புத் துறை சாா்பில் காஞ்சிபுரத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், திங்கள்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

தீயணைப்பு வீரா்கள் 53 போ் பங்கேற்ற இப்பேரணியை, மாவட்ட தீயணைப்பு அலுவலா் க.குமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் சுற்றிவந்து மீண்டும் தீயணைப்பு நிலையத்தை அடைந்தது. பேரணியின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், சளி, காய்ச்சல் இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் என்பன போன்ற பதாகைகளை கையில் பிடித்தவாறு தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT