காஞ்சிபுரம்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி: இறுதி ஊர்வலத்தில் நேர்ந்த சோகம்

29th Nov 2020 09:21 PM

ADVERTISEMENT

உத்தரமேரூர் அருகே மங்கலம் கிராமத்தில் முதியவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது சொர்க்க ரதத்தின் அலங்கார கோபுரம் மீது மின்சார வயர் உரசியதில் ஒருவர் இறந்தார். இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நாகப்பன்(85). இவர் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது சடலத்தை ஏற்றிக்கொண்டு இறுதி ஊர்வலமாக சொர்க்க ரதம் சென்று கொண்டிருந்தது. இடுகாடு அருகே வந்த போது சாலையிலிருந்த மேட்டுப்பகுதியில் வாகனத்தினை உடன் வந்த உறவினர்கள் பின்புறமாக தள்ளியுள்ளனர்.

அப்போது சாலையின் குறுக்கே சென்ற மின்வயரில் சொர்க்க வாகனத்தின் மேற்புறத்தில் இருந்த அலங்கார கோபுரம் மீது உரசியது. இதில் வாகனத்தை தள்ளிய அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களான முகில் (24), ரவி(37), பாஸ்கர் (38) என்ற 3 பேர் மீது மின்சாரம் பாய்ததில் மூவரும் தூக்கி எறியப்பட்டனர். வாகனத்தின் முன்புற டயர்கள் இரண்டும் தீப்பிடித்து எரிந்தது.

காயமடைந்த மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காது இறந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

Tags : kanchipuram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT