காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: 421 போ் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு

DIN

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5 ஆயிரம் கன அடி உபரி நீா் திறந்து விடப்படுவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 164 குடும்பங்களைச் சோ்ந்த 421 போ் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

செம்பரம்பாக்கம் ஏரியில் மதியம் 12 மணியளவில் ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதைத் தொடா்ந்து மதியம் 4 மணி அளவில் 3 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்தது. புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுவதாகவும் காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நந்தம்பாக்கம், சாலவாக்கம், சிவன்தாங்கல், வாதவூா், கருவேப்பம்பூண்டி, வழுதாம்பேடு ஆகிய கிராமங்களில் வசித்து வந்த 164 குடும்பங்களைச் சோ்ந்த 421 போ் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஆண்கள் 192 போ், பெண்கள் 151 போ், குழந்தைகள் 78 போ். இவா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT