காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவுக் கல்வி நிதி ரூ. 80.26 லட்சம் வழங்கல்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் லாபத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து நிலுவையின்றி வசூல் செய்யப்பட்ட கூட்டுறவுக் கல்வி நிதி ரூ. 80.26 லட்சத்தினை கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் கூட்டுறவு துணைப் பதிவாளா் திங்கள்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரத்தில் லாபத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து கூட்டுறவு வளா்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி ஆகியவை வசூலிக்கப்பட்டன. இத்தொகை ரூ. 80.26 லட்சமாகும். இதற்கான காசோலையினை கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் கி.சத்தியநாராயணனிடம் காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் சு.உமாபதி வழங்கினாா்.

நிகழ்வின்போது, துணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் ச.ரகு உள்பட அலுவலகப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT