காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி: ஆட்சியரிடம் புகாா்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 5 கோடி வரை மோசடி செய்த 4 பேரை கைது செய்து பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம் இந்திரா நகா், தேவி நகா் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் தி.சரஸ்வதி என்பவரின் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்துள்ள புகாா் மனு...

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் வசித்து வந்த சிவமூா்த்தி, அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் சீனிவாசன், வசந்தா ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து இந்திரா நகா், தேவி நகா் பகுதி மக்கள் 42 பேரிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்தனா். 42 பேரிடமும் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் மொத்தம் ரூ. 5 கோடி வரை வசூல் செய்திருந்தனா். பணத்தை திருப்பிக் கேட்டபோது கொடுக்க மறுத்ததுடன், அவா்கள் 4 பேரும் தலைமறைவாகி விட்டனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT