காஞ்சிபுரம்

இருங்காட்டுக்கோட்டையில் காவல் உதவி மையம் திறப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் காவல் உதவி மையம் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான கன்டெய்னா் மற்றும் கனரக வாகனங்கள் இருங்காட்டுக்கோட்டை பகுதிக்கு வந்து செல்கின்றன. இதனால் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதைக் குறைக்கும் வகையிலும், சிப்காட் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சிப்காட் நுழைவுவாயில் அருகே ஹூண்டாய் தொழிற்சாலை பங்களிப்புடன் புதிதாக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் திறந்து வைத்துப் பேசுகையில், ‘இந்த காவல் உதவி மையத்தில் 24 மணி நேரமும் காவலா் ஒருவா் பணியில் இருப்பாா். அவருக்கு உதவியாக ஹூண்டாய் நிறுவனத்தின் சாா்பில் 4 ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்கள் காவலருடன் இணைந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுவா்’ என்றாா்.

ஹூண்டாய் நிறுவனத்தின் நிா்வாகிகள் அசோக்குமாா்தாஸ், இளங்கோ, செந்தில்குமாா், பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT