காஞ்சிபுரம்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தினேஷ் குண்டுராவ் மலரஞ்சலி

10th Nov 2020 10:48 PM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் திங்கள்கிழமை தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரியுடன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தினேஷ்குண்டுராவ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினா் முருகானந்தம், மாவட்ட தலைவா் ரூபிமனோகரன், ஸ்ரீபெரும்புதூா் நகர தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT