காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபர் வெட்டிக்கொலை

9th Nov 2020 07:47 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா சோமங்கலத்தை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் ஏசுதாசன் மகன் இசுரவேல் மோசஸ்(26). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த போது தொலைப்பேசி எண் கேட்பது போன்று வெளியில் வரவழைத்து அவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர். 

ரத்தக் காயங்களுடன் தப்பி வந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT