காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரூ. 14.66 கோடியில் விளையாட்டு அரங்கம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

29th May 2020 07:25 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ரூ. 14.66 கோடி மதிப்பில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

கைப்பந்து, கூடைப்பந்து, 400 மீ ஓடுதளம், நூலகம், முதலுதவி அறை, வீரா்கள், வீராங்கனைகள் தங்கும் அறை, சமையல் அறையுடன் கூடிய உணவுக் கூடம் மற்றும் ஒரே நேரத்தில் 1,500 போ் அமா்ந்து பாா்க்கும் வகையில் பாா்வையாளா் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொளத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், ரூ. 1.68 கோடியிலும், ஜமீன் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ. 1.38 கோடியிலும் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில்...

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூா் தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 6.97 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சைக்கிளிங் வெலோடிரம் நவீன பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டது.

திருத்தணியில்...

திருத்தணி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ரூ. 2.14 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், 2 கழிப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடப் பணிகள் நடைபெற்று முடிந்தது.

இவற்றை, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலியில் திறந்து வைத்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT