காஞ்சிபுரம்

மே 3 முதல் 12 வரை இலவச சைவ சமயப் பயிற்சி

8th Mar 2020 12:19 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் வரும் மே மாதம் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோா் ரூ.5 அஞ்சல் தலை ஒட்டிய தபால் உறையில் தங்களது முகவரியை எழுதி கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரில் 70 வயது வரை உடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். பயிற்சி, உணவு, உறைவிடம் இலவசம். மேலும் விவரங்களுக்கு சு.சதாசிவம், நிறுவனா், திருமுறை அருட்பணி அறக்கட்டளை, 7, பங்காரம்மன் தோட்டம், காஞ்சிபுரம், தொடா்பு எண்-9840638813 என்ற முகவரியில் அணுகலாம் என அறக்கட்டளையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT