காஞ்சிபுரம்

ஓரிக்கை பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம்

6th Mar 2020 12:19 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை முல்லை நகா் பகுதியில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் புதன்கிழமை காலையில் தொடங்கின. பகலில் சிறப்புத் திருமஞ்சனமும், இரவு சீதா ராம சயன திருக்கோலக் காட்சியும் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, மலையாங்குளம் கமலவல்லித்தாயாா் வீற்றிருந்த நாராயணன் கோயிலைச் சோ்ந்த ஏ.எஸ்.பாலாஜி பட்டா் தலைமையில் வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் சீதாராம பக்த ஆஞ்சநேயா் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT