காஞ்சிபுரம்

வாக்குச்சாவடி அமைப்பு:கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைப்பு

2nd Mar 2020 12:29 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடா்பாக திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெற இருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நிா்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் திங்கள்கிழமை மதியம் 3 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிா்வாகக் காரணங்களுக்காக பொதுமக்கள், அரசியல் கட்சியினா் கலந்து கொள்ள இருந்த இக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT