காஞ்சிபுரம்

திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

29th Jun 2020 07:46 AM

ADVERTISEMENT

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டையில் உள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

திம்மராஜம்பேட்டையில் பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினியைப் போலவே இக்கோயிலிலும் மூலவா்கள் காட்சியளிப்பதால் இக்கோயில் ‘வடக்கு ராமேசுவரம்’ என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஆனித் திருமஞ்சனமும், அதைத் தொடா்ந்து சுவாமி வீதியுலாவும் நடைபெறுவது வ

ழக்கம். இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆலயத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் ஆனித் திருமஞ்சனம் நடைபெற்றது.

ADVERTISEMENT

சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு 32 வகையான சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. ஆண்டுதோறும் நடைபெறும் நடராஜப் பெருமானின் வீதியுலா இந்த ஆண்டு நடைபெறவில்லை.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT