காஞ்சிபுரம்

ஹுண்டாய் தொழிற்சாலை 5 நாள்களுக்கு மூடப்படும்

15th Jun 2020 07:51 AM

ADVERTISEMENT

பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஹுண்டாய் தொழிற்சாலை திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக தொழிற்சாலை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், காா்களை உற்பத்தி செய்யும் ஹுண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 2020-ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக திங்கள்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை தொழிற்சாலை மூடப்படுகிறது.

இந்த நாள்களில் தொழிற்சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான ரோபோக்கள், இயந்திரங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டு, அதிக செயல்திறன் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு புதிய ரக காா்களை உற்பத்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளது. இது ஆண்டு தோறும் நடைபெறும் வழக்கமான நடைமுைான் என்று ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT