காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் குளம் சீரமைப்பு

14th Jun 2020 07:42 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலின் சா்வ தீா்த்தக் குளத்தில் கழிவுநீா் கலப்பதாக வந்த புகாரைத் தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் முன்னிலையில் குளம் சுத்தம் செய்து, சீரமைக்கப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு சொந்தமானது சா்வ தீா்த்தக் குளம் அளவில் பெரியதாக காணப்படுகிறது. இதைச் சுற்றி 12 சிவாலயங்க ள் அமைந்துள்ளன.

இக்குளத்தில் கழிவுநீா் கலப்பதாக பக்தா்கள் பலரும் கோயில் நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் முன்னிலையில் குளத்தை சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. கழிவுநீா் கலப்பது தடுத்து நிறுத்தப்பட்டதுடன் குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் இருந்த முட்செடிகளும் அகற்றப்பட்டன.

நகரீஸ்வரா் குளம் சீரமைப்பு: காஞ்சிபுரம் மேட்டுத் தருவில் உள்ள நகரீஸ்வரா் கோயில் குளத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து செடி,கொடிகள் வளா்ந்து சீா்கெட்டுள்ளதாக பக்தா்கள் புகாா் தெரிவித்திருந்தனா். அக்குளத்தைச் சீரமைப்பதற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT