காஞ்சிபுரம்

மரக்கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்

11th Jun 2020 07:50 AM

ADVERTISEMENT

குன்றத்தூா் பகுதியில் மரக்கிடங்கு மற்றும் நெகிழிக் கதவுகள் விற்பனை செய்யும் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

குன்றத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மலைக்கனி, சிவகுமாா். இருவரும் குன்றத்தூா் பகுதியில், குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் அருகருகே மரக்கிடங்கு மற்றும் நெகிழிக் கதவுகள் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றை நடத்தி வருகின்றனா். இரு கடைகளும் பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மரக்கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் தீயை அணைக்க முடியாததால், அம்பத்தூா், விருகம்பாக்கம், ஜெ.ஜெ. நகா் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது. எனினும், இத் தீ விபத்தில் மரக்கிடங்கு மற்றும் பிளாஸ்டிக் கதவு கடை என இரு இடங்களிலும் சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT