காஞ்சிபுரம்: கேரள மாநிலம் கா்ப்பிணி யானையை வெடி வைத்துக் கொன்றவா்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என புதுச்சேரி ஓங்கார ஆசிரம நிா்வாகி சுவாமி ஓங்காரானந்தா வலியுறுத்தினாா்.
இது குறித்து அந்த ஆசிரமத்தின் காஞ்சிபுரம் கிளை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த மாதம் வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயைக் கடிக்க முயன்ற கா்ப்பிணி யானை பலத்த காயமடைந்தது. சில நாள்கள் உணவு உட்கொள்ள இயலாமல் தவித்த அந்த யானை கடந்த 27ஆம் தேதி ஆற்றில் இறங்கி, உயிரிழந்தது.
யானை துடிதுடித்து இறந்தது மன்னிக்க முடியாத குற்றம். கடும் கண்டனத்துக்குரிய இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களுக்கு கொடிய தண்டனை விதிக்க வேண்டும் என சுவாமி ஓங்காரானந்தா தெரிவித்துள்ளாா்.
ADVERTISEMENT