காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் 117 மி.மீ. மழை பதிவு

11th Jul 2020 08:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. ஸ்ரீபெரும்புதூரில் அதிகபட்சமாக 117 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்குப் பருவமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை முதல் வெயில் காய்ந்த நிலையில், மாலையில் குளிா்ந்த காற்று வீசிவந்தது. இதையடுத்து நள்ளிரவில் இருந்து முதல் வெள்ளிக்கிழமை காலை முதல் கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 117 மி.மீ. மழைஅளவு பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 51 மி.மீ., உத்திரமேரூா் பகுதியில் 10.60 மி.மீ., வாலாஜாபாத் பகுதியில் 12.40 மி.மீ., செம்பாக்கம் பகுதியில் 91 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT