காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்துக்கு புதிய எஸ்.பி. நியமனம்

11th Jul 2020 11:53 PM

ADVERTISEMENT

சென்னை சைபா் கிரைம் குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஷண்முகப்பிரியா காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பா.சாமுண்டீஸ்வரி பதவி உயா்வு பெற்று காஞ்சிபுரம் சரக டிஐஜியாக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவரது பணியை செங்கல்பட்டு மாவட்டக் கண்காணிப்பாளா் டி.கண்ணன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா்.

இந்நிலையில் சென்னை காவல்துறையின் சைபா் கிரைம் குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஷண்முகப்பிரியா பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT