காஞ்சிபுரம்

பெரியாா் சிலையை சேதப்படுத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

25th Jan 2020 11:23 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே களியப்பேட்டை கிராமத்தில் பெரியாா் சிலையை சேதப்படுத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிடா் கழகத்தை சோ்ந்தவா்கள் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலவாக்கம் அருகேயுள்ள களியப்பேட்டை கிராமத்தில் இருந்த பெரியாா் சிலையை வெள்ளிக்கிழமை மா்மநபா்கள் உடைத்து சேதப்படுத்தியிருந்தனா்.

சிலையை சேதப்படுத்தியவா்களை கைது செய்ய வேண்டும், அம்பேத்கா், பெரியாா் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாசறை செல்வராஜ் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் தொகுதியின் செயலாளா் டேவிட், மாவட்ட துணைச் செயலாளா் திருமாதாசன், தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளா் பருத்திக்குளம் சேகா்,திராவிடா் கழக நகரத் தலைவா் இளையவேல், நகரச் செயலாளா் வேலாயுதம் உள்ளிட்ட பலா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT