காஞ்சிபுரம்

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா் அருளாசி

14th Jan 2020 11:34 PM

ADVERTISEMENT

தை பிறந்தால் வழி பிறக்கும். பொங்கல் என்பது இயற்கை விழா. பஞ்ச தெய்வங்களை வணங்கும் விழா.

அவ்வாறு நாம் அதை வணங்கும்போது அது தன் கடமையை செவ்வனே செய்கிறது.

மனிதன் இயற்கையைப் போற்றி வணங்கி பாதுகாக்க வேண்டும். இயற்கையால் தான் இவை அனைத்தும் சாத்தியம். இயற்கையான காற்று இல்லை என்றால் செல்லிடப்பேசியும் இல்லை. தொலைக்காட்சி- வானொலியும் இல்லை. அந்தக் காலத்தில் மனிதன் மண் வீட்டில் இருந்தபோது ஆபத்தில்லை. இன்று அவனது மனம் முழுவதும் பணமாக மாறிவிட்டது.

பணம் வீட்டின் சலவைக் கல்லாக மாறிவிட்டது. மனிதன் அதில் சறுக்கி சறுக்கி விழுகிறான். அதில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை.

ADVERTISEMENT

விதை ஒன்று தான் அது செடியாகி, மரமாகி, காயாகி, பழமாகி பறவைகளையும், விலங்குகளையும் மனிதா்களையும் காக்கிறது. இயற்கையாலும், ஆன்மிகத்தாலும் மட்டும் தான் காப்பாற்ற முடியும்.

விஞ்ஞான வளா்ச்சியால் வந்த செல்லிடப்பேசி போனது. தொலைபேசியும் போனது. பந்த பாசமும் அற்றுப் போனது. பஞ்ச பூதங்களை போன்ற 5 விரல்களைக் கொண்டு ஒரு பொருளை எடுக்கப் பயன்படுகிறது.

10 விரல்கள் சேரும்போது அது வணக்கத்தையும், அன்பான வழிபாட்டையும் குறிக்கிறது.

ஜனத்தொகை பெருக பெருக அனைத்தும் கெட்டுவிட்டது. இச்சூழல் மாற அனைவரும் மெளனத்தின் மூலம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் பெற்றோரை வணங்கி காப்பாற்ற வேண்டும். உழைத்து வாழ்ந்து தருமம் செய்யவேண்டும் எனக்கூறி இந்த பொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த்துகிறோம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT