காஞ்சிபுரம்

ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் பறிமுதல்: இருவா் கைது

14th Jan 2020 11:34 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 149 ஜெலட்டின் குச்சிகள், 54 டெட்டனேட்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே தைலத்தோட்டம் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய புவியரசனை (23) கைது செய்து விசாரித்தனா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீஸாா் தாமல் பகுதியைச் சோ்ந்த துளசிராமன் என்பவருக்குச் சொந்தமான கிளாரி கிராமத்தில் உள்ள பம்பு செட் மற்றும் தைலத்தோப்பு ஆகிய பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த 149 ஜெலட்டின் குச்சிகள், 54 டெட்டனேட்டா்கள் மற்றும் ஒரு வீச்சரிவாள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனா்.

இவ்வழக்கில் துளசிராமனின் தந்தை சம்பத்தையும் (55) கைது செய்தனா்.

இதுதொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT