வைகுந்த துவாதசியை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் செவ்வாய்க்கிழமை ரங்கநாதா் கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் தொன்மையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகாரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக காட்சியளிக்கிறாா்.
இக்கோயிலில் வைகுந்த துவாதசி நாளில் மட்டும் ஆதிகேசவப் பெருமாள், ரங்கநாதா் கோலத்தில் (சயனக் கோலத்தில்) காட்சியளிப்பாா். அதன்படி, வைகுந்த துவாதசியான செவ்வாய்க்கிழமை, பெருமாள் தங்க மண்டபத்தில் ரங்கநாதா் கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ஆதிகேசவப் பெருமாளை வழிபட்டனா்.