காஞ்சிபுரம்

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலி

8th Jan 2020 12:10 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் உளுந்தை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாத்ரி (19). அவா் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

வெங்கடாத்ரி செவ்வாய்க்கிழமை காலையில் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குப் புறப்பட்டாா். ஸ்ரீபெரும்புதூா் சின்னக்கடை தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனம் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT